உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகம் கலெக்டர் பிரதீப் குமார்

80பார்த்தது
திருவெறும்பூர் வட்டம், குண்டூரில் தொடங்கிய முகாமின் முதல் நிகழ்வாக, திருவளர்ச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் செயல்படும் காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவை ஆட்சியர் மா. பிரதீப்குமார் சோதனை செய்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
தொடர்ந்து, குண்டூர் அரசு கால்நடை மருத்துவமனை, விஏஓ அலுவலகம், ரேஷன் கடை ஆகியவற்றில் ஆய்வு செய்து, ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று பொதுமக்களின் அளித்த கோரிக்கை மனுக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

தொடர்ந்து குண்டூர் பர்மா காலனி அங்கன்வாடி மையம், நவல்பட்டில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், துவாக்குடி அரசு மருத்துவமனை ஆகியவற்றை ஆய்வு செய்து, நவல்பட்டில் நடைபெற்ற குறுவட்ட பட்டா மாறுதல் முகாம் பணிகளை பார்வையிட்டு, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

முகாமில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் உடனடித் தீர்வாக வருவாய்த் துறை சார்பில் 6 பேருக்கு பட்டாக்களும், 2 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் உதவி, கூட்டுறவுத் துறை சார்பில் 38 பேருக்கு ரூ. 31. 36 லட்சத்தில் பயிர்க் கடன் மற்றும் கால்நடைப் பராமரிப்பு கடன்கள் வழங்கப்பட்டன.

முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் ர. ராஜலட்சுமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் தேவநாதன் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி