ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா உட்பட பல நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இன்னும் 6 நாட்களில் ஏப்ரல் 10 அன்று இப்படம் வெளியாகிறது. இதனை முன்னிட்டு ரசிகர்கள் படத்தின் ட்ரைலர் கேட்டு படக்குழுவிடம் கோரிக்கை வைத்திருந்த நிலையில் இன்று ட்ரைலர் வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா இத்தகவலை உறுதி செய்துள்ளார்.