திருச்சி ஏர்போர்ட்டில் இருந்து துபாய்க்கு செல்வதற்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஒன்று இன்று அதிகாலை நான்கு மணிக்கு புறப்பட தயாரானது. ரன்வேயில் சென்று கொண்டிருக்கும் போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. தொழில்நுட்ப வல்லுநர்கள் தொடர்ந்து தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்ய முயற்சி செய்து வருகின்றனர். விமானத்தில் பயணித்த 113 பயணிகளும் இறக்கிவிடப்பட்டு காத்திருப்பு அறையில் தங்கவைக்கப்பட்டனர். இதனால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.