ரூ. 2. 70 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய அருண்நேரு

80பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சைமலை மணலோடை பகுதியில் 46 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய எடை மேடையை துவக்கி வைத்த பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு அவர்கள் ரூ. 2. 70 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

முன்னதாக செம்புலிச்சான்பட்டி பகுதியில் 49 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தையும் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி