போக்குவரத்து சிக்னல் கோரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

58பார்த்தது
போக்குவரத்து சிக்னல் கோரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்
திருச்சி, காட்டூா் உருமு தனலட்சுமி கல்லூரி அருகே நடந்த விபத்தில் அக்கல்லூரி மாணவா் சஞ்சய் என்பவர் காயமடைந்து சிகிச்சை பெறுகிறாா். இதையடுத்து அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும். மேலும் காயமடைந்த மாணவருக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி முன் போராட்டம் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ, மாணவியா், இந்திய மாணவா் சங்கத்தினா் உள்ளிட்ட சுமாா் 200க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தொடர்புடைய செய்தி