மதுரை: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோயிலுக்குச் செல்ல 4 நாட்களுக்கு பின் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சாமி தரிசனம் செய்வதற்காக இன்று முதல் வருகி 16ஆம் தேதி வரை மலையேற வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணம், அமாவாசை, பிரதோஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்வது வழக்கம். மழை எதிரொலியால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி சமீபத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது.