மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2027ஆம் ஆண்டு பிப்ரவரியில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என ஆர்டிஐ மூலம் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.1118.35 கோடியில் முதற்கட்ட கட்டுமான பணிகள் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா என்பவர் ‘மதுரை எய்ம்ஸ் எப்போது வரும்?’ என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு, இந்த பதில் கிடைத்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.