கர்நாடக மாநிலத்தில் நேற்று முன்தினம் கிராம வளர்ச்சி அதிகாரி பணிகளுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் கலந்துகொண்டு, தேர்வு எழுதி கொண்டு இருந்த ஒரு நபர் மீது கண்காணிப்பாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை பிடித்து சோதனை செய்யப்பட்டது. அப்போது புளூடூத்தை ஆடைக்குள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புளூடூத்தை பயன்படுத்தி கேள்விக்கான பதில்களை ஒருவரிடம் கேட்டு எழுதியுள்ளார். இதனால், அரசு பணிக்கான தேர்வில் முறைகேடு செய்ததாக போலீசார் அவரை பிடித்து சென்றுள்ளனர்.