திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, தம்பதியர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லட்சுமி நகர் பகுதியில் வீட்டில் கணவர் சிலம்பரசன் தூக்கிட்ட நிலையிலும், மனைவி அகிலாண்டேஸ்வரி கழுத்தறுக்கப்பட்ட நிலையிலும் சடலமாக கிடந்தனர். இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீசார் தற்கொலையா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். பல்லடம் அருகே கடந்த வாரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.