புரோ கபடி லீக் தொடரில் நேற்று (டிச. 9) நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில், 46-25 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி அரியானா ஸ்டீலர்ஸ் அணி அபார வெற்றிப் பெற்றது. தொடர்ந்து, புனேரி பால்டன் - தபாங் டெல்லி அணிகள் விளையாடிய மற்றொரு லீக் ஆட்டத்தில், 30-26 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பால்டனை வீழ்த்தி தபாங் டெல்லி அணி வெற்றிப் பெற்றது.