திருச்சி காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி ராக்சிட்டி சார்பில் 1. 50 லட்சம் மதிப்பிலான மாணவர்கள் அமரும் இருக்கைகள் வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 220 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு தன்னார்வலர்கள் தொண்டு நிறுவனங்கள், பொதுநல அமைப்புகள் ஆகியோர் பள்ளிக்கு தேவையான உபகரணங்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி ராக்சிட்டி சார்பில் 1, 50 லட்சம் மதிப்பிளான மாணவர்கள் அமரும் 24 இருக்கைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தனபால் தலைமை வகித்தார், அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமேஷ் முன்னிலை வைத்தார்.
இந்நிகழ்வில் ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி ராக் சிட்டியின் நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.