தெரு நாய்க்கடி பிரச்சனை உலகளாவிய பிரச்சனையாக மாறி இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் லட்சக்கணக்கானோர் தெரு நாய்க்கடியால் பாதிக்கப்படுகின்றனர். நாய்க்கடிகள் அதிகம் பதிவாகும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகம், 2024-ல் தமிழ்நாட்டில் நாய்க்கடி சம்பவங்களின் எண்ணிக்கை 4.79 லட்சம் ஆகும். உயிரிழப்பு 40 ஆக பதிவானதாகவும் தெரிவித்துள்ளார்.