இந்திய சந்தைகளில் போலி ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகள் அதிகரித்து வருவதாக புகார்கள் வந்துள்ளன. இதனால் ரூ.200 நோட்டுகள் ரத்து செய்யப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரூ.200 நோட்டுகள் ரத்து செய்யப்படுவதாக பல்வேறு இடங்களில் செய்திகள் பரவி வருகின்றன. போலி நோட்டுகளின் புழக்கத்தைத் தடுக்க, இந்திய ரிசர்வ் வங்கி மக்களுக்கு சிறப்பு அறிவுரைகளை வழங்கியுள்ளது. ரத்து செய்வது தொடர்பாக எந்த திட்டமும் இல்லை என கூறியுள்ளது.