திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி பழைய பால்பண்ணையில் இருந்து துவாக்குடி வரை 14. 5 கிலோமீட்டர் தூரம் சர்வீஸ் சாலை அமைக்காமல் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து மெத்தனப் போக்கில் இருந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் தொடர்ந்து பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் உயிர் பலியாகி உள்ளனர் இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று காலை திருவெறும்பூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காட்டூர் பகுதி செயலாளர் டி சந்தோஷ் சங்கத்தின் மாவட்ட தலைவர் லெனின் மாவட்ட செயலாளர் ஆர் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றி பேசுகையில் திருச்சி தஞ்சை சாலையில் தினம் தினம் சாலை விபத்தினால் உயிர் படையாதும் கை கால் உடல் உறுப்புகளை இழந்து ஊனமாவதும் தொடர்கதையானது. மக்கள் சாலையை கடக்கும் இடங்களில் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் சாலையை முறையாக பராமரிக்க வேண்டும் மின் விளக்குகளை எரிய செய்ய வேண்டும் சாலையில் இருக்கும் மண் குவியலை அகற்ற வேண்டும் திருவரும்பூர் சாந்தி தியேட்டர் அருகே மூடப்பட்டுள்ள பாதையை உரிய பாதுகாப்பு வசதியுடன் மீண்டும் திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருவெறும்பூர் தொகுதி பொறுப்பாளர் ரமேஷ் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.