இஸ்ரேல் - காஸா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் காஸாவில் சிறுவனைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் - காஸா இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த ஞாயிறன்று (ஜன. 21) நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில், தெற்கு காஸா பகுதியில் உள்ள ரஃபாவைச் சேர்ந்த பாலஸ்தீனச் சிறுவனை இஸ்ரேல் ராணுவம் நேற்று (ஜன. 20) துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளது.