சீமான் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

82பார்த்தது
சீமான் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கத்தினர் இன்று (ஜன., 22) காலை 10 மணியளவில் சீமான் வீட்டை முற்றுகையிட உள்ள நிலையில், 220 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே சீமான் வீடு அமைந்துள்ள பகுதியில் நாதகவினர் நள்ளிரவு முதலே குவிந்து வருகின்றனர். வழக்கம்போல இன்று காலையில் சீமான், உடற்பயிற்சிக்காக ஜிம்முக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி