டயாபட்டாலஜி இதழின் ஆய்வு முடிவின்படி ஓ அல்லாத ரத்தக் குழுவைக் கொண்டவர்களுக்கு டைப் 2 நீரிழிவு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறப்பட்டுள்ளது. ஓ வகை ரத்தக் குழுவைக் கொண்ட பெண்களைக் காட்டிலும் பி ரத்தக் குழுவைக் கொண்ட பெண்களுக்கு டைப் 2 நீரிழிவு வரும் ஆபத்து 21% அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ரத்தத்தில் வான் வில்பிராண்ட் எனப்படும் ஒரு புரதத்தின் அளவு அதிகமாக இருப்பதால் ஓ வகை அல்லாதவர்களுக்கு நீரிழிவு வரும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.