கலைஞர் நூற்றாண்டு விழா கால்பந்து போட்டி

72பார்த்தது
கலைஞர் நூற்றாண்டு விழா கால்பந்து போட்டி
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திமுக திருச்சி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் இணைந்து மாபெரும் இருபாலர் கால்பந்து போட்டி நடைபெற்றது.
ஆண்கள் கால்பந்து போட்டியினை திருச்சி மக்களவை உறுப்பினர்
துரைவைகோ பெண்கள் கால்பந்து போட்டியினை சென்னை மேயர்
பிரியாராஜன் தொடங்கிவைத்து விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த மக்கள் பிரதிநிதிகளுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் நன்றிகள் மற்றும் வாழ்த்துகளை திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் அமைச்சர் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துக் கொண்டார்

இந்நிகழ்வில் மாநகரக் கழக செயலாளர் மதிவாணன், துணை மேயர் திவ்யா, பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவர் சரண்யா மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

தொடர்ந்து பேசிய துரை வைகோ60 ஆண்டு கால தலைப்புச் செய்தியாக வாழ்ந்தவர் தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர். அவரைப் பற்றி இன்றைய தலைமுறை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம் என உரையாற்றினார்.

தொடர்புடைய செய்தி