
துவரங்குறிச்சி அருகே பள்ளத்தில் பாய்ந்த கார்
மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி அடுத்த வளநாடு கைகாட்டி அருகே மதுரையிலிருந்து திருச்சி சென்ற கார் ஒன்று சாலையோர பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த நான்கு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்களில் அவர்களை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வளநாடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.