திருவானைக்காவல் பாரதி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டுத்தலை மணி (எ) மணிகண்டன் (28). ரெளடியான இவர் சீரங்கம் ரயில்வே பாலம் பகுதியில் போதை மாத்திரைகளை விற்றுக் கொண்டிருந்தார். அவரை ஸ்ரீரங்கம் தெப்பக்குளத் தெரு பகுதியைச் சேர்ந்த சதீஷ் (27) தட்டிக் கேட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் கத்தியை காட்டி மிரட்டியதோடு சதீஷ் பையிலிருந்து ரூ. 500-ஐ பறித்துக் கொண்டார்.
இதுகுறித்து சதீஷ் அளித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து புதன்கிழமை மாலை ரெளடி மணிகண்டனை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 100 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.