உப்பிலியபுரத்தை அடுத்த கொப்பம்பட்டியில் இருந்து தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு பி. மேட்டூர் வழியாக நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில் பயிற்சி டிரைவர் நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியை சேர்ந்த சீனிவாசன், தனது உடைமைகள், பணத்துடன் உள்ள பையை வைத்துவிட்டு நடத்துனருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, முதியவர் ஒருவர் சீனிவாசனின் பையை திருடிக்கொண்டு சென்றார். இதை அறிந்த சீனிவாசன் முதியவரை பிடித்து பையை மீட்டார். மேலும் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.