தமிழ்நாடு முழுவதும் நாளை (பிப்., 23) திங்கள்கிழமை 1,000 முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். சென்னையில் 33 இடங்கள் உட்பட 1,000 மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன. ஜெனரிக் மருந்துகள், சர்ஜிக்கல், சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட அனைத்து மருந்துகளும் 20 முதல் 90 சதவிகித தள்ளுபடி விலையில் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசின் சார்பில் மக்கள் மருந்தகம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.