திருச்சி: பூட்டிய வீட்டில் நகை, சாமி சிலைகள் திருட்டு

66பார்த்தது
திருச்சி: பூட்டிய வீட்டில் நகை, சாமி சிலைகள் திருட்டு
திருச்சி தில்லை நகர், 10வது கிராசை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 61) இவர் கடந்த பிப்ரவரி 2ம் தேதி தன் வீட்டை பூட்டி விட்டு திருப்பதி கோவிலுக்கு சென்று உள்ளார். பின்னர் மீண்டும் வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது, 

இதனைத் தொடர்ந்து பாலசுப்பிரமணியன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த இரண்டு அடி உயர செம்பு சாமி சிலை, இரண்டு குத்து விளக்கு, ஒரு தங்க மூலம் பூசிய தட்டு, இரண்டு தங்க காசுகள் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து பாலசுப்பிரமணியன் தில்லைநகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி