சென்னையில் உணவு டெலிவரி ஊழியர்களுக்காக சாலையோரங்களில் 24 மணி நேர ஏசி ஓய்வறை ஏற்பாடு செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை அண்ணாநகர், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏசி ஓய்வறை அமைக்க திட்டமிட்டுள்ளது. கழிவறை, குடிநீர், ஸ்மார்ட்போன் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை அடங்கிய அறை மூலம் பெண் உணவு டெலிவரி ஊழியர்கள் அதிகளவில் பயனடைவார்கள்.