இந்தோனேசியா: நீச்சல் வீரரை முதலை கவ்விச் செல்லூம் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச்.27-ம் தேதி மத்திய சுலவேசியில் உள்ள தாலிஸ் கடற்கரையில் நீந்தி கொண்டிருந்த சதர்வினாட்டா (51) என்ற நீச்சல் வீரரை முதலை ஒன்று கடித்து இழுத்துச் சென்றது. இதையடுத்து, உள்ளூர் மீட்புக்குழுவினர் முதலையை சுட்டுக் கொன்ற பின், சதர்வினாட்டாவின் உடலை மீட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.