பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், இபிஎஸ் அண்ணாமலை மாநிலத் தலைவராக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரனை நியமித்துவிட்டு, அண்ணாமலைக்கு மத்திய இணையமைச்சர் அல்லது தேசிய பொறுப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.