“ஆன்லைன் விளையாட்டு திறமைக்கானது. திறமையாக விளையாடுவோருக்கு பிரச்னை இல்லை. திறமைக்கான ஆன்லைன் ரம்மி அடிமைப்படுத்தும் என்பதை ஏற்க முடியாது. தற்கொலைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. பணம் இழந்ததற்காக மட்டுமே தற்கொலை செய்து கொண்டதாக அரசு கூறுவது ஏற்க முடியாது" என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆன்லைன் நிறுவனம் தரப்பில் வாதத்தை முன்வைத்துள்ளது. தமிழக அரசு தரப்பு வாதத்திற்காக வழக்கு விசாரணை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.