கிணற்றில் பள்ளி மாணவிகளின் உயிரைப்பறித்த எமன்

79பார்த்தது
கிணற்றில் பள்ளி மாணவிகளின் உயிரைப்பறித்த எமன்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, சதுப்பேரியில் வசித்து வரும் இரு மாணவிகள் மேகநாதன் - துர்கா தம்பதி மகள் மோனிஷா (15) & அண்ணாமலை - அரசு தம்பதி மகள் சிவரஞ்சனி (15). தச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வரும் சிறுமிகள் நாளை ஆங்கில பொதுத்தேர்வுக்கு தயாராகினர். அங்குள்ள ஜெயவேல் என்பவரின் கிணற்றுக்கு சென்று படித்துவிட்டு, கிணற்றில் குளித்தபோது சகதியில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தீயணைப்புத்துறை அதிகாரிகள் வந்து உடலை மீட்டனர்.

தொடர்புடைய செய்தி