பஞ்சாப்: ஷுபம் கனோஜியா (27) என்ற ஆட்டோ ஓட்டுநர் 12 வயது மாணவியை ஆட்டோவில் அழைத்து சென்று அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அண்மையில் வயிற்று வலியால் சிறுமி அவதிப்பட்ட நிலையில் மருத்துவ பரிசோதனையில் 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் விசாரித்த போது நடந்த அனைத்தையும் சிறுமி கூறினார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் கனோஜியாவை போக்சோவில் கைது செய்துள்ளனர்.