கார்த்தியின் சர்தார் 2 டீசர் வெளியீடு விழாவில் இயக்குனர் PS மித்ரன் செய்தியாளர்கள் மத்தியில் பல சுவாரசிய தகவலை பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய மித்ரன், "படத்தின் கதையை நானும், கார்த்திக்கும் 1 மணிநேரத்தில் பேசி முடித்துவிட்டோம். ஆனால், இரண்டு கதாபாத்திரத்திற்கும் தனித்தனியே என மேக்கப்-க்கு மட்டும் 36 மணிநேரம் ஆனது. 36 மணிநேரமாக அவரை வச்சி செய்தும், இரண்டாவது பாகத்தில் தயங்காமல் வந்து நடித்துக்கொடுத்தார்" என்றார்.