கணவருக்கு உடலுறவில் ஆர்வம் இல்லை எனக்கூறி விவாகரத்து வழங்கிய குடும்பநல நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. எர்ணாகுளம் மூவாட்டுபுழாவில், மூடநம்பிக்கைகளால் தனது கணவருக்கு உடலுறவிலும், குழந்தை பிறப்பிலும் ஆர்வமில்லை என்று மனைவி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் விவாகரத்து வழங்கிய குடும்பநல நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கணவர் மேல்முறையீடு செய்திருந்தார். குடும்ப வாழ்வில் ஆர்வமின்மை, தாம்பத்ய கடமைகளை நிறைவேற்றுவதில் கணவர் தோல்வியடைந்திருப்பதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.