சுபாஸ் சந்திரபோஸ் என்ற ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் விளக்கமளித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர், "சுபாஸ் சந்திரபோஸ் சென்ற காரை 10 கி.மீ தூரம் போலீதார் துரத்திய நிலையில், சிந்தாமணியில் மடக்கி பிடித்துள்ளனர். அப்போது அவர் வாளை கொண்டு 2 காவலர்களை வெட்டியதோடு, நாட்டுத் துப்பாக்கியால் சுட முயற்சித்தார். இதையடுத்து, தற்காப்பிற்காக சுபாஷ் சந்திர போஸை காவல் ஆய்வாளர் என்கவுன்டர் செய்தார்" என்று பேட்டியளித்துள்ளார்.