மதுபான கொள்முதல் ஊழல் விவகாரத்தில் திமுக அரசு ஆட்சியை இழக்கும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், தெலங்கானாவில் பிஆர்எஸ் ஆட்சியை இழந்தது போல, டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை இழந்தது போல, தமிழகத்தில் திமுக ஆட்சியை இழக்கும் என்று தெரிவித்துள்ளார். டாஸ்மாக் மதுபான கொள்முதலில் சுமார் ரூ.1 லட்சம் கோடி மோசடி நடந்துள்ளதாக புதிய தமிழகம் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது டாஸ்மாக் நிர்வாகம் அமலாக்கத்துறை விசாரணை வளையத்திற்குள் உள்ளது.