தெலங்கானா: தலித் சமூக இளைஞர் பெருமாள பிரனாய் குமார் (24) தொழிலதிபரின் மகள் அம்ருதாவை திருமணம் செய்து கொண்டதற்காக 2018ம் ஆண்டு ஆணவக் கொலை செய்யப்பட்டார். குற்ற உணர்ச்சியில் அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் 4 ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், கொலையாளி சுபாஷ் குமார் சர்மாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற குற்றவாளிகள் அஸ்கர் அலி, அப்துல் பாரி, எம்.ஏ. கரீம், மாருதி ராவின் சகோதரர் ஷ்ரவன் குமார் மற்றும் மாருதி ராவின் கார் ஓட்டுநர் சிவா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.