சீமான் வீட்டு பாதுகாவலர், பணியாளரின் ஜாமீன் மனுக்கள் மீது காவல்துறை பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்ற காவல்துறை கோரிக்கைக்கு மனுதாரர்கள் தரப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஜாமீன் மனு விசாரணை நாளை மறுநாளுக்கு (மார்ச் 13) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சீமான் மீது நடிகை கொடுத்த புகாரின் பேரில் அவரது வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த விவகாரத்தில் பாதுகாவலர், பணியாளர் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.