ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
அதோனி மண்டலம் ஜாலிமஞ்சி கிராஸில் பகுதியில் அரசுப் பேருந்து இரண்டு பைக்குகள் மீது மோதியது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பைக்குகள் மீது மோதிய பேருந்து கர்நாடகாவை சேர்ந்தது என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.