மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பேருந்துகளில் இனி கட்டணமில்லா சுமை பயணச்சீட்டு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. விடியல் பயண திட்டம் போன்று இனி மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்களுக்கு பேருந்துகளில் கட்டணமில்லா சுமை பயணச்சீட்டை வழங்க வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. அவர்களது உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதை ஊக்குவிக்க சலுகை வழங்கப்பட்டுள்ளது. 100 கிமீ வரையிலான பேருந்துகளில் 25 கிலோ எடை வரையில் பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்லலாம்.