இன்று (மார்ச். 24) உலக காசநோய் தினமாகும். ஜெர்மனியை சேர்ந்த விஞ்ஞானி ராபர்ட் கோச், 1882ல் இதே நாளில் காசநோயை உருவாக்கும் பாக்டீரியாவை கண்டுபிடித்தார். இது அந்நோயை கண்டறிந்து குணப்படுத்த உதவியது. இவரின் சாதனையை அங்கீகரிக்கும் விதமாக மார்ச் 24ல் உலக காசநோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 'காசநோயை முடிவுக்கு கொண்டுவர முடியும்: உறுதிசெய், முதலீடு, விடுவித்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்தாகும்.