தமிழ்நாட்டில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 1.24 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் 47 பேர் ரேபிஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்றும் 2024ஆம் ஆண்டில் மொத்தம் 4.8 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் தெருநாய்களின் அட்டூழியம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.