போப் பிரான்சிஸ் சுவாசத்தொற்று காரணமாக கடந்த மாதம் 14ஆம் தேதி ரோம் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த ஒரு மாதமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும், போப்பின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாகவும், இரட்டை நிமோனியாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தற்போது சிகிச்சைp பெற்று வந்த போப் ஃபிரான்சிஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.