கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெரியவிளையைச் சேர்ந்த நபர் ஒருவர், லியாகத் ஹோட்டலிருந்து மந்தி பிரியாணி வாங்கிச் சென்றுள்ளார். அதனை அவரது குடும்பத்தினர் 17 பேர் சாப்பிட்டுள்ளனர். பின்னர் அவர்களுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக கடையில் விசாரணை செய்ததில், உணவு சாப்பிட்ட மற்றவர்களுக்கு எந்த பிரச்சனை ஏற்படவில்லை என ஹோட்டல் உரிமையாளர் கூறியுள்ளார்.