முசிறி அருகே மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

67பார்த்தது
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகாவில் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு கடந்த ஐந்து மாதங்களாக நிலுவையில் உள்ள ரூ.4 கோடி நிதியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முசிறி அருகே கொளக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ தலைமையேற்று 100 நாள் வேலைதிட்ட தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஐந்து மாத கூலித் தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு கூடுதலாக வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும், குறைக்கப்பட்ட ஊதியத்தை சேர்த்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசின் செயல்பாட்டினை விமர்சித்து பேசினார். அதனைத் தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுகவினர் கோஷம் எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி