மீண்டும் கூட்டணி அமைக்க இபிஎஸ் வைத்த நிபந்தனைகள் பிடிக்காததால் பாஜக இரட்டை இலையை முடக்கி நெருக்கடி தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரட்டை இலை சின்னத்தை முடக்கி அதிமுகவின் அணிகளை தனது ஒருங்கிணைத்து இபிஎஸ்-க்கு செக் வைக்கும் வகையில் பாஜக காய் நகர்த்த தொடங்கியுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அதிமுக பொதுச்செயலாளர் பதவியை செங்கோட்டையனுக்கு அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காகவே செங்கோட்டையன் டெல்லி சென்றுள்ளாராம்.