துறையூர் எஸ்பிஐ வங்கி முன்பாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

70பார்த்தது
மத்திய அரசின் புதிய சட்டங்களுக்கு எதிராக திருச்சி மாவட்டம் துறையூர் எஸ்பிஐ வங்கி முன்பாக வழக்கறிஞர்கள் ஆர்பாட்டதில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு ஜூலை ஒன்றாம் தேதி அன்று புதிய சட்டங்களை இயற்றி அமுல்படுத்தியது அதைத்தொடர்ந்து அந்த புதிய சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர் இந்நிலையில் இன்று திருச்சி மாவட்டம் துறையூரில் வழக்கறிஞர்கள் எஸ்பிஐ வங்கிக்கு முன்பாக மத்திய அரசின் புதிய சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய இந்திய தண்டனைச் சட்டம் குற்றவியல் நடைமுறை சட்டம் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களை நிறைவேற்றினால் காவல்துறையினருக்கு வானளாவிய அதிகாரங்கள் கொடுக்கப்படும் எனவும் இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் கூறி துறையூரில் வழக்கறிஞர்கள் மத்திய அரசின் புதிய சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். ரத்து செய் ரத்து செய் புதிய சட்டங்களை ரத்து செய் புகுத்தாதே புகுத்தாதே அரசியல் அமைப்பு சட்டத்தில் சமஸ்கிருதத்தை புகுத்தாதே என்று கோஷங்களை எழுப்பியவாறு இந்த போராட்டத்தில் துறையூரை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நேற்று முன்தினம் இதே கோரிக்கையை வலியுறுத்தி துறையூரில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி