திருச்சி: புகையிலை பொருள்கள் பறிமுதல்; இருவா் கைது
திருச்சி காந்தி சந்தை காவல் நிலைய போலீஸார் திருச்சி பெரியகடை வீதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றபோது அந்த பகுதி தனியார் நிறுவனத்தில் நடத்திய சோதனையில் சுமார் 30 கிலோ பதுக்கல் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிந்து அந்த நிறுவனத்தின் உரிமையாளரான ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராம்தேவ், ரூபாராம் (22) ஆகிய 2 பேரையும் செவ்வாய்க்கிழமை நவம்பர் 5 ஆம் தேதி கைது செய்தனர்.