ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், நேற்று CSK Vs RCB போட்டியில், 50 ரன்கள் வித்தியாசத்தில் RCB அணி வெற்றிபெற்றது. தோனி நேற்று 16 பந்துகளில் 30 ரன்கள் அடித்தார். வழக்கமாக தோனி 19, 20 வது ஓவரில் களமிறங்குவார். ஆனால், நேற்று CSK அணி தோல்வியடையும் என தெரிந்ததும், 16 வது ஓவரில், 9 வது பேட்டிங் வரிசையில் களமிறங்கினார். இதுகுறித்து கூறிய ஷேவாக், "இம்முறை தோனி எப்போதும்போல் இல்லாமல் 16 வது ஓவரிலேயே களமிறங்கிவிட்டார் பார்த்தீங்களா?" என கலாய்த்தார்.