பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் நடத்தப்பட்ட விழாவில் உரையாற்றிய உதயநிதி, "பத்திரிகையோடு தொடர்புகொண்டவன் என்ற உரிமையில் எனக்கிது பெருமை. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.