தூத்துக்குடி: அரசு தொழில்நுட்பக் கல்லூரி பயிற்சிக்கு பெங்களூர் பயணம்

85பார்த்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 4 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் 2 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் தொழில்நுட்ப பயிற்சியாளர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழில்நுட்பப் பணியாளர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்த தமிழக அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இதைத் தொடர்ந்து பெங்களூரில் அமைந்துள்ள டொயோட்டா டெக்னிக்கல் பயிற்சி நிலையத்தில் நடைபெறும் திறன் பயிற்சியில் கலந்துகொள்வதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 45 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் பெங்களூருக்கு தொழிற்சாலைப் பயணத்தை தொடங்கினார்கள். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து இவர்கள் சென்ற வாகனம் புறப்பட்டது. இந்த வாகனத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் புறப்பட்டுச் சென்றனர். 

இந்நிகழ்வின் போது, திறன் மேம்பாட்டுத் துறை உதவி இயக்குநர் ஏஞ்சல் விஜயநிர்மலா, மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர் ஸ்வர்ணலதா, துணை ஆட்சியர் (பயிற்சி) சத்யா உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். இவர்கள் அனைவரும் நாளை ஒரு நாள் பெங்களூரில் பயிற்சி பெற்று மீண்டும் தூத்துக்குடி திரும்புவார்கள்.

தொடர்புடைய செய்தி