ரெட்மி நிறுவனம் அடுத்து ரெட்மி 13எக்ஸ் போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. முதலில் மலேசியாவில் அறிமுகம் செய்யப்படும். அதன்பின்பு மற்ற நாடுகளில் இந்த புதிய போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், போன் குறித்த அம்சங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன் குறைந்த விலையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.