தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி கார் மீது சாய்ந்த பதைபதைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. சிவனைந்தபுரம் விளக்கில் அதிவேகமாக வந்த கன்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச் சுவரின் மீது மோதி சாலையில் சென்ற கார் மீது சாய்ந்தது. லாரி சாய்ந்ததில் காரின் பின்பக்கம் சேதமான நிலையில், நல்வாய்ப்பாக 4 பேர் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நன்றி: News Tamil 24x7